ஹோட்டல் பார்க்கிங்கில் போடப்பட்ட பறிமுதல் வாகனங்கள் - கடையை மூட மறுத்ததால் போலீசார் ஆவேசமா?

இரவில் ஹோட்டலை மூட மறுத்ததால் அந்த ஹோட்டலின் பார்க்கிங் பகுதியில் காவல்நிலையத்தில் நிற்கும் பழைய வாகனங்களை போலீசாரே கொண்டு வந்து போட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹோட்டல் பார்க்கிங்கில் போடப்பட்ட பறிமுதல் வாகனங்கள் - கடையை மூட மறுத்ததால் போலீசார் ஆவேசமா?
x
எழும்பூரில் இயங்கி வரும் தனியார் ஹோட்டல் ஒன்றை இரவு 11 மணியுடன் மூட வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஹோட்டல் நிர்வாகம் இரவு 2 மணி வரை ஹோட்டல் நடத்துவற்கான மாநகராட்சி அனுமதியை காட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் குற்ற வழக்குகளில் சிக்கி காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்களை ஒரு லாரியில் ஏற்றி ஹோட்டலின் பார்க்கிங் பகுதியில் கொண்டு வந்து போட்டதாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத ஹோட்டல் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்