பொன்னேரி அருகே நான்குவழி சாலைக்காக வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

பொன்னேரி அருகே நான்குவழி சாலைக்காக வீடுகளை இடிக்க அளவீடு செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பொன்னேரி அருகே நான்குவழி சாலைக்காக வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
பொன்னேரி அருகே நான்குவழி சாலைக்காக வீடுகளை இடிக்க அளவீடு செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருவள்ளூர் புதுவயலில் இருந்து பழவேற்காடு வரை சுமார் 22 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம், பெரிய காவனம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் இந்த சாலை பணிக்காக அகற்றப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்காக நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள், 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் தங்களது வீடுகளை இடிக்க கூடாது என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்