பொலிவிழந்த அருவிகள்... களையிழந்து காணப்படும் குற்றாலம்

பருவமழை பெய்யாத நிலையில் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து இல்லாததால் அருவிகள் உள்ள இடம் களையிழந்து காணப்படுகிறது.
x
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் சீசன் களைகட்டும். ஒவ்வொரு வருடமும் மழை பெய்து அருவிகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு இதுவரை மழை  பெய்யாததால் அருவிகளில் நீர்வரத்து இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்ததால் குற்றாலமே வெறிச்சோடி காணப்படுகிறது. கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் வணிகர்களும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்