மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் - முதல்வர் தொடங்கி வைக்கும் முன்னர் விநியோகம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பதற்கு முன்பாக விநியோகம் செய்த 2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் காத்திருப்புப் பட்டியல் வைக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் - முதல்வர் தொடங்கி வைக்கும் முன்னர் விநியோகம்
x
தமிழக அரசு சார்பில், அரசு பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டில் இந்த திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடக்கி வைப்பார் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சேலம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் முன்கூட்டியே மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் ஆகியோரை காத்திருப்பு பட்டியலில் வைத்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. விலையில்லா மடிக்கணினி வழங்கியதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டது கல்வித்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்