உத்தரவை நீதித்துறையே பின்பற்றாதது வேதனையானது - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
நீதித்துறையின் உத்தரவை நீதித்துறையே பின்பற்றாதது வேதனையானது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தேனியை சேர்ந்த திருமலைக்குமாரசாமி என்ற நூலக ஊழியர் தனது பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கில் கடந்த 2012 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. இதனால் எட்டரை ஆண்டுகளாக தேனி அலுவலகத்திலேயே அவர் பணிபுரிந்து வருவதாகவும் நூலகத்துறை மனுவில் கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி திருமலைக் குமாரசாமியை நான்கு வாரத்தில் பணியிட மாறுதல் செய்ய உத்தரவிட்டார். மேலும் 2012 -ல் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடந்த 7 ஆண்டில் ஒரு முறை கூட வழக்கு விசாரணைக்கு வரவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி தடையை நீக்கக்கோரும் மனுக்களை வழக்கு எண் வழங்கப்பட்டதில் இருந்து 2 வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் நீதிபதி உத்தரவை நீதித்துறையே பின்பற்றாதது வேதனை அளிப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
Next Story