நடிகர் சங்கத் தேர்தலுக்கான விஷால் அணியில் நந்தா வேட்புமனு தாக்கல்

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் பாண்டவர் அணி நிறைவேற்றியதாக தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் நந்தா தெரிவித்தார்.
நடிகர் சங்கத் தேர்தலுக்கான விஷால் அணியில் நந்தா வேட்புமனு தாக்கல்
x
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் பாண்டவர் அணி நிறைவேற்றியதாக தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் நந்தா தெரிவித்தார். சென்னையில் சங்கத் தேர்தலுக்கான  வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். தங்கள் அணி மீது எந்த குற்றச்சாட்டையும் சுமத்தும் அளவிற்கு தங்களுடைய செயல்பாடுகள் இல்லை என்று நடிகர் நந்தா தெரிவித்தார். தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய நாடக நடிகர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு இதுவரை ஓய்வூதியமாக 1 கோடியே 80 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் நடிகர் நந்தா கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்