"தன்னம்பிக்கையுடன் படித்தால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறலாம்" - ஸ்ருதி
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஸ்ருதி 685 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதல் இடத்தையும் இந்திய அளவில் 57 வது இடத்தையும் பிடித்தார்.
வெளியான நீட் தேர்வு முடிவுகளில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஸ்ருதி , 685 மதிப்பெண்களுடன் ,மாநில அளவில் முதல் இடத்தையும், இந்திய அளவில் 57 வது இடத்தையும் பிடித்தார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட மாணவி ஸ்ருதி, மருத்துவர்களான பெற்றோர் அளித்த ஊக்கத்தினால் முதல் இடம் பிடிக்க முடிந்ததாக தெரிவித்தார். தன்னம்பிக்கையுடன் படித்தால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறலாம் எனவும் மாணவி ஸ்ருதி கூறியுள்ளார்.
Next Story
