கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு
x
கூடங்குளம் அருகே அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருட்களை தற்காலிகமாக சேமித்து  வைப்பதற்கான அணுக்கழிவு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் அடுத்த மாதம் 10-ஆம் தேதி ராதாபுரத்தில் நடைபெறும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களை கலவரப்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமைந்திருப்பதாக, அறிக்கையொன்றில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றை இறுதி செய்த பிறகு, பணிகளை தொடங்க வேண்டும் எனவும்  அதுவரை கூடங்குளம் அணு உலைகளை தற்காலிகமாக மூட  வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுபோல, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ள கண்டனத்தில், நாடு முழுவதிலும் இருந்து அணுக் கழிவுகளைக் கொண்டு வந்து கூடங்குளத்தில் கொட்டி வைப்பது கற்பனை செய்ய முடியாத பேரழிவை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். அணுக் கழிவுகளை கையாள, முறையான கட்டமைப்புகளை உருவாக்க முடியாத நிலையில், கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்