காவி நிற முண்டாசுக்கு மாறிய பாரதியார் : +2 தமிழ் பாடப் புத்தகத்தால் புதிய சர்ச்சை

பிளஸ் 2 தமிழ் பாடப்புத்தகத்தில் பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் அச்சாகியுள்ளது.
காவி நிற முண்டாசுக்கு மாறிய பாரதியார் : +2 தமிழ் பாடப் புத்தகத்தால் புதிய சர்ச்சை
x
பிளஸ் 2 தமிழ் பாடப்புத்தகத்தில் பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் அச்சாகியுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி, தமிழக அரசு வெளியிட்டுள்ள 12 - வது வகுப்பு பொதுத் தமிழ் பாட புத்தகத்தின் அட்டையில், பாரதியார் படம் இடம் பெற்றுள்ளது. அதில், பாரதியாரின் முண்டாசு, காவி நிறத்திலும் முகம் வெள்ளையாகவும், சட்டை பகுதி பச்சை நிறத்திலும் அச்சிடப்பட்டுள்ளது. தேசியக் கொடி போன்ற நிறத்தில் இது காணப்படும் நிலையில், பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பதாக, சர்ச்சை எழுந்துள்ளது. புத்தக வடிவமைப்பில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறே இதற்கு காரணம் என தமிழக பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. இனிமேல், பாடப் புத்தகத்தின் அட்டைப் படத்தை மாற்ற இயலாது எனவும் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்