களைகட்டும் மாம்பழ சீசன் - விற்பனை படுஜோர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாம்பழ சீசன் துவங்கி உள்ளதையடுத்து செந்தூரம், அல்போன்சா,சென்கவரி உள்ளிட்ட மாம்பழ ரகங்களின் விற்பனை களைகட்டி உள்ளது.
களைகட்டும் மாம்பழ சீசன் - விற்பனை படுஜோர்
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாம்பழ சீசன் துவங்கி உள்ளதையடுத்து செந்தூரம், அல்போன்சா,சென்கவரி உள்ளிட்ட மாம்பழ ரகங்களின் விற்பனை களைகட்டி உள்ளது. குமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மாம்பழத்திற்கு தனி சுவை உண்டு. எனவே இங்குள்ள மாங்காய் மற்றும் மாம்பழத்துக்கு கிராக்கி அதிகம். இந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் கடந்த ஆண்டை விட அதிகமாக காணப்படுகிறது. மேலும் குமரி மாவட்டத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து மாம்பழங்கள் அதிகளவு விற்பனைக்கு வர துவங்கியுள்ளதால் விற்பனை களைகட்டி உள்ளது. குமரி மாவட்டத்தில் 90 % விளைச்சல் ஆனபிறகே காய்கள் பறித்து விற்பனை செய்யப்படுவதால் அவற்றை  அதிகளவில் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக கேரளாவிலிருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு குமரி மாங்கனியை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். தற்போது மாங்காய் கிலோ 60 ரூபாய்க்கும், செங்கவரிக்காய் உள்ளிட்ட மாங்காய் ரகங்கள் கிலோ 100 முதல் 150 வரை விற்பனை ஆகிறது.

Next Story

மேலும் செய்திகள்