6.5 தங்கம் மற்றும் 35 கிராம் வெள்ளியில் மசூதி : நகை தொழிலாளி கின்னஸ் சாதனை முயற்சி

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவன்.
6.5 தங்கம் மற்றும் 35 கிராம் வெள்ளியில் மசூதி : நகை தொழிலாளி கின்னஸ் சாதனை முயற்சி
x
வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவன். கடந்த 35 ஆண்டுகளாக நகைத்தொழில் செய்து வரும் இவர்,கின்னஸ் சாதனை புரிவதற்காக குறைந்த மில்லி கிராம் தங்கத்தில் நுண்ணிய அளவில் பல்வேறு மாதிரி பொருட்களை திறம்பட உருவாக்கி வருகிறார். இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் 6.5 கிராம் தங்கம் மற்றும் 35 கிராம் வெள்ளியில் மசூதி செய்து சாதனை படைத்துள்ளார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற லட்சியத்தில் தொடர்ந்து  மிக குறைந்த தங்கத்தில் பல பொருட்களை செய்வதாக கூறிய தேவன், 48 மணி நேர இடைவிடாத முயற்சியால் தற்போது தங்கம் மற்றும் வெள்ளியிலான மசூதியை  உருவாக்கியதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்