ஸ்விகி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி - காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னையில் ஸ்விகி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி நூதன முறையில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்விகி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி - காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார்
x
சென்னை முகப்பேரைச் சேர்ந்த பிரசாத், காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ஸ்விகி நிறுவனத்தில் இணைந்து பணியாற்றலாம் என்றும், இதற்காக, 3 இருசக்கர வாகனங்களும், 3 ஆன்டிராய்டு அலைபேசிகளையும், வாங்கச் செய்ததாக தெரிவித்தார். 

ஆனால், சில மாதங்களுக்கு பிறகு சங்கர் தம்மை மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரசாத், இது போல் பலரையும் ஏமாற்றி வருவதாகவும், இதன் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், தமது வாகனங்கள் மற்றும் அலைபேசிகளை மீட்டுத் தரும்படி காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்