அரசு பள்ளிகளுக்கு ஆய்வக பொருட்கள் வாங்கியதில் முறைகேடு என புகார்

அரசு பள்ளிகளுக்கு ஆய்வகப் பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
அரசு பள்ளிகளுக்கு ஆய்வக பொருட்கள் வாங்கியதில் முறைகேடு என புகார்
x
தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு ஆய்வகப் பொருட்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.  அவை தரமற்றவையாக உள்ளதாகவும் அதில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிக்க வேண்டும் எனவும் கேகே ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். டெண்டர் வெளிப்படையாக நடைபெறவில்லை என்பதால், தரம் குறைந்த பொருட்கள் மற்றும் புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி அமர்வு, அது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்