உள்ளாட்சி தேர்தல் - இடஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு அரசாணை பிறப்பித்து உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் - இடஒதுக்கீடு பட்டியல் வெளியீடு
x
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு அரசாணை பிறப்பித்து உள்ளது. அதன்படி உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு, அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 200 வார்டுகளில் ஆண்களுக்கு 95 வார்டுகளும், பெண்களுக்கு 105 வார்டுகளும் ஒதுக் கப்பட்டு உள்ளன. திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இதில் பெண்களுக்கு 33 வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதேபோல் சேலம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஆணையில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறி தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது புதிதாக வார்டு வரையறை செய்யப்பட்டு,  இடஒதுக்கீடு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்