திமுக பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டார் ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, வருகின்ற ஜுன் 3 ஆம் தேதி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
திமுக பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டார் ஸ்டாலின்
x
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, வருகின்ற ஜுன் 3 ஆம் தேதி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்காக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இதற்காக 100 அடி உயரத்தில் திமுகவின் கட்சிக்கொடி மற்றும் 100 அடி உயரத்தில் கருணாநிதியின் கட் அவுட்டும் வைக்கப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்