10 ஆண்டுகளுக்கு பின் இயக்கப்பட்ட திருவாரூர் - காரைக்குடி ரயில் சேவை

திருவாரூர் - காரைக்குடி இடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட ரயில் சேவை சுமார் 3 மணி நேரம் தாமதமாக சென்றடைந்ததால் பயணிகள் மிகுந்த சிரமமடைந்தனர்.
10 ஆண்டுகளுக்கு பின் இயக்கப்பட்ட திருவாரூர் - காரைக்குடி ரயில் சேவை
x
திருவாரூரில் இருந்து காரைக்குடி ரயில் பாதையை அகல பாதையாக மாற்றி அமைக்கும் பணி 10 ஆண்டுகளுக்கு பின் முடிவுற்றது. இதனைதொடர்ந்து இந்த வழித்தடத்தில் ரயில் சேவை இன்று காலை 8.15 மணிக்கு திருவாரூரில் தொடங்கியது. அங்கிருந்து மாங்குடி, மாவூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வழியாக அந்த ரயில் காரைக்குடிக்கு செல்ல 160 கிலோ மீட்டர் தூரம். இந்த வழியில் 72 ரயில்வே கேட்டுகள் இருந்தும் அங்கு பணியாட்கள் அமர்த்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ரயில்வே கேட்டை கடக்கவும் ரயிலில் வரும் ஊழியர்களே இறங்கி திறந்தும், ரயில் கடந்த பின் கேட்டை மூட வேண்டிய நிலையும் உள்ளது. காலை 8.15 மணிக்கு திருவாரூரில் புறப்படும் ரயில் பிற்பகல் 2.15 மணிக்கு காரைக்குடியை சென்றடையும் என்று ரயில்வே நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரயில் கேட்டுகளை கடந்து செல்வதில் தடங்கல் இருப்பதால் இந்த ரயில் 3 மணி நேரம் தாமதமாக காரைக்குடிக்கு சென்றடைந்தது. இதனால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்ததாக கூறினர். இந்த ரயில்பாதையை மாற்ற ரயில்வே நிர்வாகம் 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட போதும் முன்னேற்பாடுகள் இன்றி ரயில் பயணத்தை தொடங்கியதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்