குடியிருப்பு பகுதியில் செயல்படும் இரண்டு ஆலைகள் : மூடக்கோரி லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

சென்னை திருவெற்றியூர் பூங்காவனம் குடியிருப்பு பகுதியில் பருப்பு மற்றும் தவிடு ஆலைகள் இயங்கி வருகின்றன.
குடியிருப்பு பகுதியில் செயல்படும் இரண்டு ஆலைகள் : மூடக்கோரி லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்
x
சென்னை திருவெற்றியூர் பூங்காவனம் குடியிருப்பு பகுதியில் பருப்பு மற்றும் தவிடு ஆலைகள் இயங்கி வருகின்றன. பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த 2 தொழிற்சாலைகளை மூடக்கோரி அங்கு வந்த சரக்கு லாரியை சிறை பிடித்து மக்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, வண்டுகளும் தவிடு தூசுகளும் பரவி வீடுகளில் படிவதால் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக வேதனை தெரிவித்த மக்கள், இது குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்