தலைக்கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது : விபத்தில் உயிரிழப்பை தடுக்க காவல்துறை அதிரடி முடிவு

திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று முதல் தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்க தடை விதித்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
தலைக்கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது : விபத்தில் உயிரிழப்பை தடுக்க காவல்துறை அதிரடி முடிவு
x
திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று முதல் தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்க தடை விதித்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது. விபத்தில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் காவல்துறை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. திருச்செந்தூர்  சுற்றுவட்டாராப் பகுதிக்குட்பட்ட இடங்களில் 13 பெட்ரோல் பங்குகள் இயங்கி வரும் நிலையில், அங்கு வரும் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் வழங்கக் கூடாது என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்