நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரம் : 12% ஜிஎஸ்டியை குறைக்க தயாரிப்பாளர்கள் கோரிக்கை

கோடை விடுமுறையை தொடர்ந்து பள்ளிகள் திறக்க உள்ளதால் சிவகாசியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரம் : 12% ஜிஎஸ்டியை குறைக்க தயாரிப்பாளர்கள் கோரிக்கை
x
கோடை விடுமுறையை தொடர்ந்து பள்ளிகள் திறக்க உள்ளதால் சிவகாசியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான  நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நோட்டுகளுக்கு தேவையான முன்பதிவு இருந்தாலும், காகித தட்டுப்பட்டால் நோட்டு தயாரிக்கும் பணி மந்தமாக இருப்பதாகவும், தேவைக்கு குறைந்த அளவே காகிதம் கிடப்பதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் காகிதம், அட்டை போன்ற மூலப்பொருள் விலை உயர்வாலும், தொழிலாளர்களின் கூலி உயர்வாலும், நோட்டுகளின் விலை 10 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ள நோட்டு தயாரிப்பாளர்கள், நோட்டுகளுக்கு உள்ள 12 சதவீதம் ஜிஎஸ்டி வரியை 6 சதவீதமாக குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்