காலாவதியாகும் தேதி குறிப்பிடாமல் பொருட்கள் விற்பனை : ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

கொடைக்கானலில் காலாவதியாகும் தேதி குறிப்பிடப்படாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
காலாவதியாகும் தேதி குறிப்பிடாமல் பொருட்கள் விற்பனை : ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்
x
கொடைக்கானலில் காலாவதியாகும் தேதி குறிப்பிடப்படாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் நடராஜன் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர், பிரையண்ட் பூங்கா, ஏரிச்சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அதில்  பல்வேறு கடைகளில் காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நெய்,காப்பித்தூள்,  டீத்தூள்,  கலர் சாக்லேட்டுகள், நெய், தேன்  உட்பட சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை  பறிமுதல் செய்ததோடு, காலவாதியான பொருட்களை விற்றால், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என வியாபாரிகளை எச்சரித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்