நச்சு புகையால் பொதுமக்கள் பாதிப்பு : மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே வேப்பம்பாளையம் சிட்கோ தொழில் வளாகத்தில் இயங்கும் நிறுவனங்களால் அபாய நோய் தாக்கம் உள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
நச்சு புகையால் பொதுமக்கள் பாதிப்பு : மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
வேப்பம்பாளையம் சிட்கோ தொழில் வளாகத்தில், ரப்பர், குரூடு ஆயில் போன்றவற்றை மறுசுழற்சி செய்யும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.  அங்கிருந்து வெளியேறும் நச்சு புகையால் சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும், கேன்சர் உள்ளிட்ட அபாய நோய்கள் வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த நிறுவனங்களின் புகையால்  அப்பகுதி காற்று மாசுபடுவதுடன், துர்நாற்றம் காரணமாக அங்கு வசிக்க முடியாத சூழலும் ஏறபட்டுள்ளதாக மக்கள்  கூறுகின்றனர். அந்த நிறுவனங்கள் கழிவு நீரை பூமிக்குள் துளையிட்டு செலுத்துவதால், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகார் அளித்தும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று  குற்றஞ்சாட்டியுள்ள மக்கள், காவல்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளனர்.  அந்த நிறுவனங்கள் உடனடியாக  பணிகளை நிறுத்தவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்