ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரிப்பு

ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேருவதற்கான தகுதி மதிப்பெண்ணை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
x
கடந்த 2002-2003ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேருவதற்கு ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியினருக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதுமானது என இருந்தது. பிற வகுப்பினர்கள் 45 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் எனவும் அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில்,  நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்காக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி,  "தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் 2014ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆசிரியர் பயிற்சி படிப்பு மாணவர் சேர்க்கைக்கு 2019-2020ஆம் கல்வி ஆண்டு முதல் பொதுப்பிரிவினருக்கு 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற வேண்டும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் 45 விழுக்காடு மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்