ஜூன் 8, 9ம் தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

ஜூன் 8, 9ம் தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜூன் 8, 9ம் தேதிகளில் நடைபெற உள்ள  ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்
x
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி கிருஷ்ணகிரியை சேர்ந்த பரமானந்தம், சக்திவேல் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். நெட் போன்ற தேர்வுகளில் நிரந்தர சான்றிதழ் வழங்கும் நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வு சான்று ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என இருப்பது சட்ட விரோதமானது என அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது லட்சக்கணக்கானோர், தேர்வு எழுத காத்திருப்பதால், தடை விதிக்க கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்