அறிவிக்கப்படாத மின்வெட்டு : தீப்பெட்டி உற்பத்தி பாதியாக குறைந்தது
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ஏராளமான தீப்பெட்டி ஆலைகளும் அதனை சார்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தீப்பெட்டி ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன. மூலப்பொருள்களின் விலையேற்றம், ஜி.எஸ்.டி பிரச்சினை காரணமாக தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது அறிவிக்கப்படாத மின்தடை காரணமாக தீப்பெட்டி உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. முன் அறிவிப்பு இல்லாமல் மின் தடை ஏற்படுவதால், இயந்திரங்கள் அடிக்கடி பழுதாவதுடன், அதன் காரணமாக பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பதாகவும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Next Story

