காரைக்கால் : வீட்டில் பதுக்கப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள நிரவி ஹைவே நகர் பகுதியில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
காரைக்கால் : வீட்டில் பதுக்கப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள நிரவி  ஹைவே நகர் பகுதியில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து நகராட்சி மற்றும் காவல்துறையினருடன் இணைந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. போதை பொருட்களை வீட்டில் வைத்து இருந்த ரவி என்பவரிடம் விசாரித்தபோது, காரைக்காலில் உள்ள கடைகளுக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்தது தெரியவந்தது. 

Next Story

மேலும் செய்திகள்