கோவை : பாரம்பரிய இசை கருவிகள் கண்காட்சி

கோவை மாவட்டம், வ.உ.சி மைதானம் அருகே உள்ள அருங்காட்சியகத்தில், பாரம்பரிய இசை கருவிகள் கண்காட்சி தொடங்கியுள்ளது.
கோவை : பாரம்பரிய இசை கருவிகள் கண்காட்சி
x
கோவை மாவட்டம், வ.உ.சி மைதானம் அருகே உள்ள அருங்காட்சியகத்தில்,  பாரம்பரிய இசை கருவிகள் கண்காட்சி தொடங்கியுள்ளது. 30-க்கும் மேற்பட்ட பழம்பெரும் இசைக்கருவிகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. அதில், வில்லாடி வாத்தியம், கொம்பு, திருச்சின்னம், தப்பு, பஞ்முகவாத்தியம், மகுடி, புல்லாங்குழல், நாதஸ்வரம் உள்ளிட்ட கருவிகள் குறிப்பிடத்தக்கவை. இசைக் கருவிகளை இசைத்து காட்டுவது மட்டுமில்லாமல் அவற்றின் வரலாறு குறித்தும் இசைக் கலைஞர்கள் விளக்கினர். இந்த இசைக் கருவிகள் கண்காட்சிக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்