தாழையூத்து : ரயில் விபத்து - மீட்பு பணி ஒத்திகை
நெல்லை மாவட்டம் தாழையூத்தில், ரயில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் தாழையூத்தில், ரயில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில்,10 துறைகளைச் சேர்ந்த 250 வீரர்கள் பங்கேற்றனர். இதற்காக தாழையூத்து ரயில்நிலையத்தில் ரயில்பெட்டிகள் கவிழ்ந்து கிடப்பது போல் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. விபத்துக்குள்ளான ரயிலில் இருந்து பயணிகளை மீட்பது எப்படி, முதலுதவி, மருத்துவக் குழு செயல்பாடு உள்ளிட்டவை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
Next Story

