சனிபகவான் ஆலயத்தில் விழா - வைகாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

திருநள்ளாறில் உள்ள சனிபகவான் ஆலயத்தில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சனிபகவான் ஆலயத்தில் விழா - வைகாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
x
திருநள்ளாறில் உள்ள சனிபகவான் ஆலயத்தில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட கொடிக்கும், பஞ்சமூர்த்திகளுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விநாயகர் மற்றும் கொடிமரத்திற்கு பால், மஞ்சள், திரவியப்பொடி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு  திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்