திருப்பூரில் 19 வங்கதேச இளைஞர்கள் கைது

திருப்பூரில் முறையான ஆவணங்கள் இன்றி பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்த 19 வங்கதேச இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் 19 வங்கதேச இளைஞர்கள் கைது
x
திருப்பூரில் முறையான ஆவணங்கள் இன்றி பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்த 19 வங்கதேச இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பகுதியில்,   வேலம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவரை நிறுத்தி விசாரணை நடத்தினார்.  அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அந்த இளைஞர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும், உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்ததும் தெரியவந்தது. அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டதில், சிறுபுலுவப்பட்டியை அடுத்த அத்திமர தோட்டம் பகுதியில் தன்னுடன்  சேர்ந்து 18  வங்க தேசத்தினர் உரிய ஆவணங்களின்றி தங்கியிருப்பதாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த 18 பேரையும் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்