திருச்சுழியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி - கொள்ளையர்கள் 4 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொள்ளையர்கள் புகுந்தனர்.
திருச்சுழியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி - கொள்ளையர்கள் 4 பேர் கைது
x
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொள்ளையர்கள் புகுந்தனர். கோயில் வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்த கொள்ளையர்கள் பணம், நகைகளை கொள்ளையடிக்க முடியாமல் தப்பி சென்றனர். இது குறித்து கோயில் பூசாரி கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருச்சுழி பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது கோயிலில் கொள்ளையடிக்க முயற்சி செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து முருகன், முத்துப்பாண்டி, வெங்கடேஷ், சரவணக்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்