குன்றத்தூரில் பெற்ற மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை

சென்னை குன்றத்தூரில் மருமகளிடம் மது போதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
குன்றத்தூரில் பெற்ற மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை
x
மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்த பாண்டியன் என்பவது மகன் நாகராஜ், ஆட்டோ ஓட்டுநர் ஆவார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால், குடித்து விட்டு அவ்வப்போது தமது மனைவி தீபாவிடம், சண்டையிடுவதை வாடிக்கையாக கொண்டார் நாகராஜ். இந்நிலையில் கடந்த, 25ம் தேதி மனைவி தீபாவிடம் நாகராஜ் தகராறில் ஈடுபட்ட நிலையில், ஆத்திரமடைந்த தந்தை பாண்டியன், அருகில் இருந்த கத்தியால்  குத்தியுள்ளார். படுகாயங்களுடன், கடந்த சில நாட்களாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகராஜ், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனை, கொலை முயற்சி வழக்காக விசாரித்து வந்த குன்றத்தூர் போலீசார், தற்போது கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தந்தையே மகனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்