அனைவரது கவனத்தை ஈர்க்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்...

தூத்துக்குடியில், ஆட்டோ ஓட்டுவது மூலம் பொருள் ஈட்டும் பெண் ஒருவர், பெண்கள் பலருக்கு முன்மாதிரியாக மாறி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
x
தூத்துக்குடி அரு​கே உள்ள சோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்த கட்டடத் தொழிலாளி ரத்னகுமாரின் மனைவி ரூபாதேவி. மகன், மகள் என இரண்டு பிள்ளைகளுடன் வாழ்க்கை நடத்திவரும் அவர், கணவனுக்கு உதவியாக சம்பாதிக்க முடிவு செய்தார். ஆனால், வருமானம் ஈட்டுவதற்கு வழிதேடிய அவரை அழைத்த ரூபாதேவியின் தம்பி, அக்காவுக்கு ஆட்டோ ஓட்ட பயிற்சி அளித்துள்ளார். ஒருமாதத்துக்குள் நன்கு தேறிய ரூபாதேவி சொந்தமாக ஒரு ஆட்டோ வாங்கி, சட்டென சாலையில் இயக்கிவிட்டார். சற்றும் சளைக்காமல், ஆண்களுக்கு இணையாக ஆட்டோ ஓட்டும் அவர், நாள் ஒன்றுக்கு ஐநூறு முதல் ஆயிரம் ரூபாய் சம்பாதித்து அசத்தியுள்ளார். விரும்பிய நேரத்தில் வீட்டு வேலைகளை பார்க்கவும், குழந்தைகளை கவனித்துக் கொள்ளவும் போதுமான நேரம் கிடைப்பதாக கூறுகிறார் ரூபாதேவி. அவருக்கு, மாவட்டத்தின் முதல் பெண் சாதனையாளர் விருது வழங்கி, தனியார் நிறுவனம் ஒன்று கவுரவித்துள்ளது. ஓராண்டாக ஆட்டோ ஓட்டிவரும் ரூபாதேவியின் துணிச்சல், பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்