"ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்" - தேர்வு வாரியம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அடுத்த 3 தேர்வுகளுக்கு தடை விதிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவர் - தேர்வு வாரியம் எச்சரிக்கை
x
ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. முதல் தாள் தேர்வை ஒரு லட்சத்து 83 ஆயிரம் பேரும், இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 2 ஆயிரம் பேரும் எழுத உள்ளனர். முதல் தாள் தேர்வு 470 மையங்களிலும், இரண்டாம் தாள் தேர்வு 1081 மையங்களிலும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கான விதிமுறைகள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆசிரியர் தகுதித் தேர்வில் விண்ணப்பதாரர்கள் முறைகேட்டில் ஈடுபட்டாலோ அல்லது மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை தேர்வு அறைக்குள் கொண்டு சென்றாலோ இந்த தேர்வில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது. முறைகேட்டில் ஈடுபடுவோர் அடுத்து வரும் மூன்று தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்