10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள வெள்ளநீர் கால்வாய் திட்டம்... தண்ணீருக்கு ஏங்கும் 300 கிராம மக்கள்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, திமுக ஆட்சி காலத்தில், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு ஆகிய நதிகளை இணைத்து வெள்ள நீர் கால்வாய் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, திமுக ஆட்சி காலத்தில், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு ஆகிய நதிகளை இணைத்து வெள்ள நீர் கால்வாய் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. தாமிரபரணி மற்றும் மணிமுத்தாறு நதிகளின் உபரி நீர் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் விதமாக, 300 க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் வகையில் அந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் அப்பகுதி நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதற்கட்ட நிலம் கையகப்படுத்தல் பணிகளுக்கு பின்னர் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்பதால் தற்போது வரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் தற்போது நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story