புதுச்சேரி : மின்கட்டண உயர்வுக்கு எதிராக பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்வாரிய தலைமை அலுவலக வாயிலை பூட்டி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர், மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை தூக்கிப் போட்டு உடைத்தனர்.
புதுச்சேரி : மின்கட்டண உயர்வுக்கு எதிராக பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்வாரிய தலைமை அலுவலக வாயிலை பூட்டி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர், மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை தூக்கிப் போட்டு உடைத்தனர். புதுச்சேரியில், வரும், ஒன்றாம் தேதி முதல், மின் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ. சாமிநாதன் தலைமையில், அக்கட்சியினர் 100 பேர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிம்னி விளக்கு வைத்தும், தீப்பந்தம் ஏந்தியும் கண்டன முழக்கம் எழுப்பிய அவர்கள், அம்மி அரைத்தும் நூதன முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மிக்சி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதன பொருட்களையும் தூக்கிப்போட்டு உடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்