குவைத்தில் உள்ள கணவரை மீட்க கோரி பெண் புகார் மனு

குவைத்தில், உள்ள தமது கணவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என,கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்திடம், சபி என்னும் பெண் புகார் மனு அளித்துள்ளார்.
குவைத்தில் உள்ள கணவரை மீட்க கோரி பெண் புகார் மனு
x
குவைத்தில், உள்ள தமது கணவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என,கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்திடம், சபி என்னும் பெண் புகார் மனு அளித்துள்ளார். அவர் அளித்த மனுவில், தமது கணவர் சஹாய ராஜா குவைத்தில் வேலை பார்ப்பதாகவும், அங்குள்ள அரபி உரிய சம்பளம் தராமல் அடித்து கொடுமைபடுத்துவதாக கூறியுள்ளார். மேலும் இந்தியாவுக்கு அனுப்புமாறு, குவைத்தில் உள்ள தூதரகத்தில் கணவர் சஹாய ராஜா கேட்டுக்கொண்டும், அதிகாரிகள் அலைக்கழிப்பதாக மனுவில் தெரிவித்துள்ளார். என கணவரை உடனடியாக இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்