ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட விவசாயிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது என விவசாயிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட விவசாயிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x
நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது என விவசாயிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காமேஷ்வரம் கிராமத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். விவசாய நிலங்களையும் கடல் பகுதிகளையும் பாழாக்க கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி கடைமடை பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முற்பட்டால், அனைத்து கட்சி மற்றும் மக்களை திரட்டி வலுவான தொடர் போராட்டங்களை நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்