7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு : குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு : குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
x
குளித்தலை அருகே தண்ணீர் பள்ளியை சேர்ந்தவர் சுந்தரம். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை வீட்டிற்குள் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுந்தரத்தை கைது செய்தனர். இந்த வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பளித்த நீதிபதி சசிகலா, குற்றவாளி சுந்தரத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்