கல்வி உதவித்தொகையை தராமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக மாணவ, மாணவிகள் புகார்

12ம் வகுப்பு முடித்த மாணவ,மாணவிகளுக்கு அரசு உதவித்தொகையை அதிகாரிகள் வழங்காமல் அலைக்கழித்து வருவதாகக் கூறி மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
கல்வி உதவித்தொகையை தராமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக மாணவ, மாணவிகள் புகார்
x
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்த மாணவ,மாணவிகளுக்கு அரசு உதவித்தொகையை அதிகாரிகள் வழங்காமல் அலைக்கழித்து வருவதாகக் கூறி மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். பின்னர் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் சில மாணவர்களை மட்டுமே மனு கொடுக்க அனுமதித்தனர். இதுபற்றி மாணவ, மாணவிகள் கூறும்போது, தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக130க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அலைந்து வருவதாகவும் அதிகாரிகள் தங்களை அலைக்கழித்து வருவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்