கள்ளக் காதலனுடன் வாழவந்த இடத்தில் குழந்தை கொலை

கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது பெண் குழந்தையை கொலை செய்து முட்புதரில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக் காதலனுடன் வாழவந்த இடத்தில் குழந்தை கொலை
x
கோவை சரவணம்பட்டி அடுத்த கரட்டுமேடு முருகன் கோயில் கிரிவலப் பாதையில் 3 வயது பெண் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.தனது குழந்தையை காணவில்லை என தவித்த பெண் ஒருவர், இறந்தது தமது குழந்தைதான் என்று அழுது புலம்பினார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.மேட்டுப்பாளையம், வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த  தமக்கும் கணவர் பாலாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் அவரை பிரிந்து வந்து குழந்தையுடன் வாழ்ந்துவந்ததாகவும் கூறியுள்ளார்.இந்த நேரத்தில், ஒருவாரத்துக்கு முன்பு தவறுதலான அழைப்பு மூலம் அறிமுகமான தமிழ் என்ற இளைஞருக்கும், ரூபினிக்கும் காதல் மலர்ந்துள்ளது. தனியாக வாழ முடிவு செய்த இருவரும், சரவணம்பட்டி பகுதியில் சந்தித்துள்ளனர். அப்போது, குழந்தை அழுதபடியே இருந்ததால், ஆத்திரமடைந்த காதலன் தமிழ், குழந்தையை தமது பாட்டி வீட்டில் விட்டுவிட்டு வருவதாக வாங்கிச் சென்ற தமிழ், குழந்தையை தரையில் அடித்து கொலை செய்துவிட்டு, தப்பியுள்ளான். இது தெரியாத ரூபினி, காதலனுக்காக காத்திருந்தார். முட்புதரில் குழந்தை இறந்து கிடந்த குழந்தை
யின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்ததில், இந்தச் சம்பவம் தெரியவந்துள்ளது. இது சரவணம்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்