வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறைக்காக, வைகை அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் சிறுவர் ரயிலில், உற்சாக பயணம் மேற்கொண்டனர்.
வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
கோடை விடுமுறைக்காக, வைகை அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் சிறுவர் ரயிலில், உற்சாக பயணம் மேற்கொண்டனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. முக்கிய சுற்றுலா தலமான வைகை அணைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை விடுமுறை முடியும் தருவாயில், வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சிறுவர்களுக்காக இயக்கப்படும் உல்லாச ரயிலில், குடும்பத்துடன் பயணம் செய்து மகிழ்ந்தனர். வைகை அணை பூங்காவில், ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் உள்ளதால், காலை முதல் மாலை வரை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருந்தனர். இந்த நிலையில், கூட்டம் அதிகமாக வரும் நாட்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று, சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்