கோதாவரி - காவிரி இணைப்பிற்கு கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வரவேற்பு
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை வரவேற்பதாக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை வரவேற்பதாக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். ஈரோடு திண்டலில், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின், ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கோதாவரி - காவிரி ஆறு இணைப்பு திட்டத்தை வரவேற்பதாகவும், இந்த நதி நீர் இணைப்பு திட்டத்தை துவக்குவதற்கு அழுத்தம் கொடுப்போம் என்றும் கூறிய ஈஸ்வரன், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதாக தெரிவித்தார். மக்கள் நலன் கருதி உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Next Story