தோல்வியடைந்த வேட்பாளர் அளித்த பிரியாணி விருந்து

சுமார் 68 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த அ.தி.மு.க. வேட்பாளர், வாக்காளர்களுக்கு பிரியாணி உணவு வழங்கி நன்றி தெரிவித்தார்.
தோல்வியடைந்த வேட்பாளர் அளித்த பிரியாணி விருந்து
x
சுமார் 68 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த அ.தி.மு.க. வேட்பாளர், வாக்காளர்களுக்கு பிரியாணி உணவு வழங்கி நன்றி தெரிவித்தார். பெரம்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேஷ், தி.மு.க. வேட்பாளர் சேகரிடம், 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த நிலையில், தமக்கு வாக்களித்த பெரம்பூர் தொகுதி மக்களுக்கு, ராஜேஷ், முட்டையுடன்  சிக்கன் பிரியாணி வழங்கினார். இரு சக்கர வாகனங்களில், கட்சியினருடன்  பிரச்சார வாகனத்தில் வீதி வீதியாக சென்று  நன்றியும் தெரிவித்தார். அவரது ஆதரவாளர்கள், 'நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்' என பேனர் வைத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்