"மனோரமா பெயரில் அரசு விருது வழங்க வேண்டும்" - இயக்குநர் பாக்யராஜ்

மறைந்த நடிகை மனோரமாவின் 82வது பிறந்த நாள் விழா சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
x
மறைந்த நடிகை மனோரமாவின் 82வது பிறந்த நாள் விழா சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி, திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மனோரமாவின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், திரைத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு, நடிகை மனோரமா  பெயரில் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்துவோம் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்