குடிநீர் டேங்க் விழுந்து சிறுமி உயிரிழப்பு

திண்டிவனம் அருகே செண்டூர் பகுதியில் டிராக்டரில் இணைக்கப்பட்ட குடிநீர் டேங்க் கழந்து விழுந்ததில் சாகித்யா என்ற 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிநீர் டேங்க் விழுந்து சிறுமி உயிரிழப்பு
x
திண்டிவனம் அருகே செண்டூர் பகுதியில் டிராக்டரில் இணைக்கப்பட்ட குடிநீர் டேங்க் கழந்து விழுந்ததில் சாகித்யா என்ற 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிராக்டர் ஓட்டுநர் ஏகாம்பரம் என்பவர் குடிபோதையில் டிராக்டரை ஓட்டி வந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  சிறுமி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அக்கம் பக்கத்தினர் ஏகாம்பரத்தை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  கோயில் திருவிழாவுக்காக பெங்களூருவிலிருந்து செண்டூர் வந்த கன்னியப்பன் என்பவரின் மகள் சாகித்யா உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்