பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - கோடை விடுமுறையை கொண்டாட ஆர்வம்

கோடை விடுமுறையை ஒட்டி பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - கோடை விடுமுறையை கொண்டாட ஆர்வம்
x
ஆசியாவிலேயே மரத்தால் ஆன பெரிய அரண்மனையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை விளங்குகிறது. எழில்மிகு காட்சியாக அனைவரது கண்களையும் குளிர்விக்கும் வகையில் கலைநயத்தோடு, இந்த அரண்மனை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி  முந்தைய தலைமுறையினர் பயன்படுத்திய கருவிகள் உள்ளிட்ட பல பொக்கிஷங்கள் அரண்மனையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் இங்கு வருவதற்கு அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.   தற்போது கோடை காலம் என்பதால், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஏராளமான சுற்றுலா பயணிகள் அரண்மனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.   

Next Story

மேலும் செய்திகள்