முட்டைகளை ஆம்லேட் போட்டு சாப்பிட்டு சென்ற திருடர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த முட்டைகள் எடுத்து ஆம்லேட் போட்டு சாப்பிட்டு சென்றுள்ளனர்.
முட்டைகளை ஆம்லேட் போட்டு சாப்பிட்டு சென்ற திருடர்கள்
x
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த முட்டைகள் எடுத்து ஆம்லேட் போட்டு சாப்பிட்டு சென்றுள்ளனர். வெண்பாக்கம் அண்ணா தெருவை சேர்ந்த வாசுதேவன், தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். இதனை அறிந்த கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து, 25 சவரன் நகை, வைர மோதிரம், எல்.சி.டி டிவி மற்றும் சிசிடிவி கேமராவை திருடிச் சென்றுள்ளனர். பின்னர் குளிர்சாதன பெட்டியில் இருந்த பொருட்களை எடுத்து சாப்பிட்ட கொள்ளையர்கள், முட்டைகளை எடுத்து ஆம்லேட் போட்டு சாப்பிட்டு சென்றுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்