அமெரிக்கா : சீனா இடையே வர்த்தக போர் எதிரொலி - இந்திய ஜவுளி ஏற்றுமதி உயரும் வாய்ப்பு

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது 25 சதவீதம் வரை கூடுதல் வரியை அமெரிக்கா விதித்ததை அடுத்து சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரியை உயர்த்தியது.
அமெரிக்கா : சீனா இடையே வர்த்தக போர் எதிரொலி - இந்திய ஜவுளி ஏற்றுமதி உயரும் வாய்ப்பு
x
சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது 25 சதவீதம் வரை கூடுதல் வரியை அமெரிக்கா விதித்ததை அடுத்து சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரியை உயர்த்தியது. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த வர்த்தக போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதால், இந்தியாவில் குறிப்பாக திருப்பூரில் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் வர்த்தக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக இந்திய ஜவுளிக்கான தேவை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனாவிலிருந்து ஜவுளி வாங்கிய பல வாடிக்கையாளர்கள் தற்போது இந்தியாவில், குறிப்பாக திருப்பூர் ஜவுளியை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றும், இது ஏற்றுமதியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பு எனவும் ஜவுளி ஏற்றமதி அபிவிருத்தி கவுன்சில் துணைத்தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்