திருப்பூர் கொங்கணகிரியில் நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றதாக புகார் - மீன் வியாபாரி மீது பொதுமக்கள் புகார்
திருப்பூர் கொங்கணகிரியில் கடந்த இரண்டு நாட்களில் 15க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
திருப்பூர் கொங்கணகிரியில் கடந்த இரண்டு நாட்களில் 15க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி கோபால் மீது அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தினமும் சாலையில் செல்லும் போது நாய்கள் அவரை பார்த்து குறைத்ததால் ஆத்திரம் அடைந்த அவர், மீன் பிடிக்க உபயோகிக்கும் மருந்தை உணவில் கலந்து நாய்களுக்கு வைத்தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காட்சிகளை திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்து, கோபால் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.
Next Story