குன்னூர் : 61வது பழக் கண்காட்சி துவக்கம்

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசன் நிலவுகிறது.
குன்னூர் : 61வது பழக் கண்காட்சி துவக்கம்
x
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில்  முதல் சீசன் நிலவுகிறது. சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கோடை விழா நடத்தப்படுகிறது. கோடை விழா குன்னூரில் நடைபெறும் பழக்கண்காட்சியுடன் நிறைவு பெறுகிறது. அதன்படி, இந்த ஆண்டு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் 61வது பழக் கண்காட்சியை இன்று மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் துவக்கி வைத்தார். பூங்காவின் நுழைவு வாயிலில் பழங்களால் ஆன வரவேற்பு வளையமும், வண்ணத்து பூச்சி, மாட்டு வண்டி, மயில் அசோக சக்கரம் ஆகிய உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்